சீனாவில் கனமழை : பலி எண்ணிக்கை 225 ஆக உயர்வு

ஞாயிறு, 24 ஜூலை 2016 (14:00 IST)
தற்போது சீனாவில் பெய்து வரும் கன மழையில், 225 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., மத்திய ஹீ பெய் மாகாணத்தில் 2.5 லட்சம் பேர் சிக்கியுள்ளனர்.


 

 
சீனாவில் தற்போது கோடைகாலம். ஆனாலும், அங்கு தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வடக்கு மற்றும் மத்திய சீனாவில் இடைவிடாது மழை பெய்த மழையில், ஹூபெய், ஹெனான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்கு பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சரிந்துவிட்டனர். லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
 
மழை காரணமாக, பெரும்பாலான இடங்களில் மின்சாரமும், தகவல் தொடர்பும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.


 

 
மோசமான வானிலை குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று அந்நாட்டு மக்கள், சீன அரசு மீது, கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மழை காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கும் என சீன அரசு அறிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்