தலையில் கத்தி குத்தப்பட்ட நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர்

திங்கள், 5 ஜனவரி 2015 (16:25 IST)
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
 
பிரேசிலின் அகுயா பிரான்சா நகரைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் 39 வயதுடைய ஜுயாசெலோ நன்ஸ் டி ஆலி வெரியா. இவருக்கும், மற்றொருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது.
 
இந்தத் தகறாறு அதிகரிதுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த நபர் நன்ஸ் டி ஆலி வெரியாவை 3 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். இறுதியில் தலையில் குத்திய அந்தக் கத்தி அவரது கண் வழியாக பாய்ந்து பின்புறமாக வெளியேவந்துள்ளது. அந்த கத்தியை வெளியே எடுக்க முடியதபடி ஆழமாகப் பதிந்துள்ளது.
 
இந்நிலையில், நன்ஸ் டி ஆலி வெரியா மன உறுதியுடன் 62 மைல் தூரம் (ஏறத்தாழ 100 கிலேமீட்டர்) சென்றுள்ளார். சுமார் 3 மணி நேரம் தனது டாக்சியை ஓட்டி சென்று டெரேசினா நகரில் உள்ள மருத்துவமனையை அடைந்துள்ளார்.
 
 
அங்கு, அவரது தலையில் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்தது,  அந்த கத்தியை தலையில் இருந்து அகற்றினர். இதனால் அவர் உயிர் தப்பியுள்ளார்.
 
அவர் தலையில் பாய்ந்த கத்தி சமையலறையில் பயன்படுத்தக்கூடிய கத்தி என்றும் அது 30 செ.மீட்டர் நீளமுடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
 
இந்த அருவை சிகிச்சைக்குப் பின்னர், அவர் தனது கண் பார்வை இழந்துள்ளார், அத்துடன் நுகரும் தன்னமையையும் இழந்துள்ளார். ஆனால், நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்