நீண்ட நேரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்த பெண்

Sinoj

வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (21:08 IST)
ர்
நைஜீரிய பெண் ஒருவர்  நீண்ட நேரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்த  உலகில் மனிதர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இதற்காக பலரும் தொடர்ந்து பயிற்சி செய்து வருகின்றனர். சிலர் முயற்சியின் மூலம் அதை அடைந்துவிடுகின்றனர்.

இந்த நிலையில், நைஜீரிய பெண் ஒருவர் அதிக  நேரம் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எவாலுவா ஒலாட்டுஞ்சி என்பவர்,  தொடர்ந்து 31 மணி  நேரம் தொடர்ச்சியாக பாடல்கள் பாடி நீண்ட கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

உணவு உண்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும் என தனியாக நேரம் கொடுக்கப்பட்டதாகவும், இந்த சாதனை நிகழ்வின்போது அவருக்கு தொண்டை வலி  ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பாடி இந்த சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்