அங்கு சாப்பிட சிக்கன் உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த அவர் அருகில் இருந்த கடை ஒன்றில் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். சமீபத்தில் அந்த லாட்டரிக்கான பரிசு விவரங்கள் வெளியான நிலையில் மூதாட்டியும் தனது லாட்டரி எண் அதில் உள்ளதா என்று சோதித்துள்ளார். அதில் அந்த லாட்டரி எண் உள்ளதுபோல பாட்டிக்கு தோன்றியுள்ளது.
உடனடியாக தனது மகளிடமும் அந்த லாட்டரி சீட்டை காட்டியுள்ளார். அது பாட்டியின் லாட்டரி எண்தான் என்பது தெரிந்தவுடன் குடும்பமே குஷியில் ஆழ்ந்துள்ளது. லாட்டரி பரிசு வென்ற அந்த பாட்டிக்கு 2,29,682 டாலர்கள் (இந்திய மதிப்பில் 1.9 கோடி) பரிசாக கிடைக்க உள்ளது. சில காரணங்களால் பாட்டி பெயர் வெளியிடப்படவில்லை. பரிசை வென்ற பாட்டி இனிதான் தனது வாழ்க்கை தொடங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.