கூகுளின் சக்திக்கு ஓய்வு: கூகுள் மூத்த துணைத்தலைவர் அமித் சிங்கால் ஓய்வு

வியாழன், 4 பிப்ரவரி 2016 (13:27 IST)
கூகுள் தேடலின் கிங் என்று வர்ணிக்கப்படும் கூகுளின் முத்த துணைத்தலைவரும், அந்நிறுவனத்தின் சகத்திவாய்ந்த மனிதருமான அமித் சிங்கால் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்.


 
 
கூகிளின் பரந்த ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவை வழிநடத்தும், கூகுளின் பொறியியல் துணைத்தலைவர் ஜான் ஜைனேந்திரா, அமித் சிங்கால் வகித்த பதவிக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
 
கூகுள் நிறுவனத்தின் உள்ளே ஆரம்பம் முதலே அமித் சிங்கால் ஒரு மாபெரும் சக்தியாக இருந்து வருகிறார். கூகுள் தேடுபொறியில் அவரது ஆரம்ப பொறியியல் வேலைக்காக 2006-இல் இவருக்கு கூகுள் ஃபெல்லோ என்ற பெயரும் உண்டு.
 
மொபைல்களில் கூகுள் தேடுபொறியின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பணிகள் பெரும் பங்கு. இவரது ஓய்வு கூகுள் நிறுவனத்துக்கு ஓர் பேரிழப்பே ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்