எங்ககிட்டயும் AI டெக்னாலஜி இருக்கு! ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக கூகிளின் ’பார்டு’!

புதன், 8 பிப்ரவரி 2023 (08:49 IST)
செயற்கை நுண்ணறிவில் சமீபமாக  ட்ரெண்டில் உள்ள ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக கூகிள் நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தவுள்ளது.

சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை எட்டி வருகிறது. அனைத்து விதமான தொழில்நுட்ப பணிகளையும் செயற்கை நுண்ணறிவே செய்துவிடும் வகையில் வளர்ந்து வருவதால் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள ‘சாட் ஜிபிடி’ தனது செயல்பாடுகளால் உலகம் முழுவதும் ட்ரெண்டாகியுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவை எலான் மஸ்க்கின் ஓபன் ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில் பிரதான பங்குதாரர்களாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஆகியோர் உள்ளனர்.

சாட் ஜிபிடியின் வருகையால் இனி கூகிளின் பயன்பாடு உலகம் முழுவதும் குறைந்துவிடும் எனவும் பேசிக்கொள்ளப்பட்டது. ஆனால் சும்மா விடுமா கூகிள்? பதிலுக்கு களத்தில் இறங்கியுள்ள கூகிள் தானும் ஒரு செயற்கை நுண்ணறிவை கண்டுபிடித்துள்ளது. ‘பார்டு’ (Bard) எனப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு முதலில் பீட்டா சோதானையாளர் குழுவுக்கு வழங்கப்பட உள்ளது.

சோதனைகளுக்கு பிறகு இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய ஏஐ மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூகிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதனால் எதிர்காலம் செயற்கை நுண்ணறிவுகளுக்கு இடையேயான போட்டியாக மாறப் போகிறது என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்