கூகுளில் இனி கட்டணம்: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

வியாழன், 12 நவம்பர் 2020 (16:22 IST)
கூகுளில் இனி கட்டணம்: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கூகுளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த ஒரு சேவை இனிமேல் கட்டணம் என அறிவித்துள்ளதால் கூகுள் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கடந்த 5 ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுத்திருந்த வசதிகளில் ஒன்று கூகுள் போட்டோஸ் என்பது அறிந்ததே. இந்த கூகுள் போட்டோஸ் அன்லிமிட்டட் இலவச சேமிப்பை கொடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தகக்து. இதனை அடுத்து தற்போது வரும் வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் கூகுள் போட்டோஸ் அன்லிமிட்டட் இலவச சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது 
 
இனிமேல் அன்லிமிட்டட் ஆக போட்டோக்களை சேமித்து வைத்துக்கொள்ள முடியாது என்றும் 15 ஜிபி மட்டும் மட்டுமே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இலவசமாக சேமித்து வைக்க முடியும் என்றும் அதற்கு மேல் சேமித்து வைக்க வேண்டுமென்றால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூகுள் அறிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பு 2021 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என கூகுள் அறிவித்துள்ளது. இதனால் கூகுள் போட்டோஸ் வசதியை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்