இங்கிலாந்தில் இரண்டாயிரம் ஆண்டு பழமையான தங்க நாணயம் கண்டுபிடிப்பு

சனி, 25 அக்டோபர் 2014 (19:50 IST)
குகையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான நாணயங்கள் பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
 

 
இங்கிலாந்தில் உள்ள டெர்பிஷைர் பகுதியில் உள்ள குகை ஒன்றில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய (இரும்புக் கற்காலம்) காலகட்டத்தில் உள்ள கடவுள் உருவம் பதித்த, முழு அளவிலான ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆனவையாகும். இந்த நாணயங்கள் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
 

 
புக்ஜ்டன் அருங்காட்சியகத்தில் உள்ள ரோஸ் வெஸ்ட்வுட் எனும் பெண் கூறுகையில், 'பொதுமக்கள் பார்வைக்காக இவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நாணயத்தைக் கொண்டு வந்தவர் இரண்டு மாத ஊதியத்திற்குச் சமமான தொகையைக் கேட்டார்' என்று கூறினார்.
 
மேலும் இந்த நாணயங்கள் கி.பி. 43ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ரோமானிய படையெடுப்பு நிகழ்ந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்