விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக, கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட சாலை விபத்தில் ஜோஷ்வா மரணமடந்தார். எனவே, தன்னுடைய காதலர், அவரின் குழந்தை வடிவத்திலாவது தன்னுடன் இருக்க வேண்டும் என்று கருதினார் அய்லா.
ஜோஷ்வாவின் உயிரணுக்களை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு, அய்லா ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்களும் உறுதிப்படுத்தியதால், நீதிபதிகள் அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, செயற்கை கருத்தரித்தல் மூலம் தனது காதலரின் குழந்தையை தன் வயிற்றில் சுமக்க தயாராகி விட்டார் அய்லா. மேலும், நாங்கள் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார். இருப்பினும், அவரின் ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அய்லா.