300 ஆண்டுகளுக்கு பின்னர் கண் திறந்த சிறுமியின் சடலம்(வீடியோ)

செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (11:23 IST)
மெக்சிகோ நகரில் 300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிறுமியின் சடலம் கண் திறந்து பார்த்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
மெக்சிகோவில் உள்ள ஜலிஸ்கோ நகரில் கவுடலராஜா என்ற தேவாலயம் உள்ளது. இங்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு சாண்டா இனோசென்சியா என்ற சிறுமி உயிரிழந்தார். இவரது உடல் கவுடலராஜா தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 
இங்கு அடிக்கடி சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அப்படி வந்த ஒரு சுற்றுலா பயணி இந்தப் பெண்ணின் சடலத்தை வீடியோ எடுத்தார். அந்த வீடியோவில், சடலம் கண் திறந்த பார்த்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்தது.
 
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இறந்த அவரது சடலத்தை இன்றும் அந்த தேவாலயம் வேக்ஸ் மூலம் பாதுகாத்து வருகிறது.
 
இதோ அந்த வீடியோ, உங்களுக்காக......
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்