பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் உடல் நிலை கவலைக்கிடம்

வெள்ளி, 10 ஜூன் 2022 (20:47 IST)
பாகிஸ்தான் நாட்டில் ராணுவத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்து நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் முன்னாள் அதிபர் பர்வவேஸ் முஷரப்.

இவர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி தற்போது துபாயில் வசித்து வரும் நிலையில்,  உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், திடீரென்று முஷரப் உடல் நிலை மோசம் அடைந்ததால், அவர் இன்று காலையில் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றப்பட்டதாகவும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் முஷரப் குடும்பத்தினர் ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதில் அவர் 3 வாரமாக வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளதாகவும்,அவர் மீண்டு வருவது
இயலாததாகும்,  அதனால் அவர் பிழைக்க பிரார்த்தனை செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்