காட்டுத் தீயில் கருகி சாம்பலாகிய 100 வீடுகள்: 400 பேர் வெளியேற்றம்

செவ்வாய், 3 ஜனவரி 2017 (20:21 IST)
சிலி நாட்டின் துறைமுக நகரமான வால்பரைசோ அருகே பரவிய காட்டுத் தீயால் 100 மர வீடுகள் எரிந்து சாம்லாகின. அப்பகுதியில் வசித்து வந்த 400 பேர் வெளியேற்றப்பட்டனர்.


 

 
சிலி நாட்டின் துறைமுக நகரமான வால்பரைசோ அருகே உள்ள மலைப்பகுதியில் நேற்று பிற்பகல் தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக பிளாயா அஞ்சா மலைப்பகுதிக்கு தீ பரவியது. இப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
 
தீ பரவியது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், வனத்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் ஆகியோர் சம்பவ விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர். முன்னெச்சரிக்கை காரணமாக அப்பகுதியில் இருந்து சுமார் 400 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
 
சுமார் 100 மர வீடுகள் தீயில் கடுகி சேதமடைந்தது. காற்று தொடர்ந்து அதிகமாக வீசுவதால் மேலும் அடுத்தடுத்த பகுதிகளுக்கு தீ பரவ வாய்ப்புள்ளது என்றும், சுமார் 500 வீடுகள் தீயில் கடுகி சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்