தானியங்கி பறக்கும் கார்கள் 2017 ஆம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது

செவ்வாய், 17 மார்ச் 2015 (13:45 IST)
உலகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



 
இதற்கான ஆராய்ச்சியில், கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ஏரோமொபில் இதற்கான இறுதிகட்ட வடிவமைப்பு பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது.
 
இந்த பறக்கும் கார், பெட்ரோலில் ஓடும் வகையில் தயாரிக்கப்படவுள்ளது. இந்தக் கார்களில் 2 நபர்கள் அமர்ந்து பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பறக்கும் கார், தானியங்கி (ஆட்டோ பைலட் மோட்) முறையில் இயங்கும் வகையில் ஒரு மாடலும், மனிதர்களே ஓட்டும் வகையில் மற்றொரு மாடலும் வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது பயன்பாட்டில் உள்ள கார்களைப் போன்று தரையில் வேகமாக ஓடி, அதன்பின்னர் சிறிய ரக விமானம் போல மேல் எழும்பிச் செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டு வருகின்றது.
 
இந்த கார் 400 மைல் தூரம்வரை விண்ணில் பறந்தபடி விரைவாக சென்றடையும். பாரச்சூட்டின் உதவியுடன் இறங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இது கீழே இறங்கும்போது, சில நூறு அடி நீளம் கொண்ட ஒரேயொரு செயற்கை புல்தரை மட்டும் இருந்தால் போதும். இந்த பறக்கும் காரை தரையிறக்கி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்