புளோரசென்ட் தவளை பற்றி தெரியுமா??

வெள்ளி, 17 மார்ச் 2017 (10:20 IST)
இரவில் ஒளிரும் புளோரசென்ட் தவளை அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 
 
நாள்தோறும் புதிய உயிரினங்கள் பற்றிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இரவு நேரங்களில் மின்னும் புதிய வகை பச்சை தவளை அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
பகல் பொழுதுகளில் அந்த தவளையின் வண்ணம், பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நேரங்களில் தெரிகிறது. ஆனால் இரவு நேரங்களில் அதன் கண்களும், உடலில் உள்ள புள்ளிகளும் அடர் நீலத்திலும் மற்ற பகுதிகள் புளோரசென்ட் பச்சை வண்ணத்திலும் மின்னுகின்றன. 
 
குறுகிய அலை நீளம் கொண்ட ஒளியை உறிஞ்சி, பின்னர் நீண்ட அலை நீளத்தில் ஒளியை உமிழ்வது புளோரசென்ஸ் இயல்பு. அந்த இயல்பு இந்த அரிய வகை தவளையிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்