சூரியனை சுற்றி வளையம் - அவசர உதவிக்கு அழைத்த பெண்

புதன், 23 ஏப்ரல் 2014 (17:40 IST)
பிளோரிடாவை சேர்ந்த பெண் ஒருவர் சூரியனை சுற்றி இருந்த வளையத்தை பார்த்து அச்சமடைந்து அவரச உதவிக்கு அழைத்துள்ளார். 

சூரியனில் இருந்தோ, சந்திரனில் இருந்தோ  வெளிப்படும் ஒளியானது ஐஸ் கிரிஸ்டல்கள் மூலமாக ஒளிவிலகல் ஏற்படும் போது சூரியனை சுற்றி ஒரு வளையமாக ஏற்படுவது உண்டு. இதற்கு 'சன் ஹலோ' (Sun  Halo) எனப் பெயர்.   
 
இவ்வேளைகளில், இந்த வளையத்தின் பல முனைகள் சூரிய ஒளியினை சிதறடித்து பல கோணங்களில் பிரதிபலித்து தோன்றும். இந்த நிகழ்வு பிளோரிடாவில் நிகழ்ந்துள்ளது. 
 
இதனை பார்த்த பெண் ஒருவர், சூரியனை சுற்றி இருந்த வளையத்தை பார்த்துவிட்டு அவசர உதவி எண்ணிற்கு அழைத்து இது குறித்து தெரிவித்துள்ளார். இவரது அழைப்பை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள உதவியாளரை அனுப்பிவைப்பதாக தெரிவித்தனர்.
 
பின்னர் தான் இது ஆபத்தான நிகழ்வு அல்ல என்பதை அப்பெண்ணிற்கு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்