ஒமிக்ரான் வைரசுக்கு பலியான முதல் நபர்: அதிர்ச்சியில் அரசு!

திங்கள், 13 டிசம்பர் 2021 (17:43 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது ஒரு சில நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை பார்த்து வருகிறோம்.
 
குறிப்பாக பிரிட்டனில் தினந்தோறும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது அந்நாட்டு அரசுக்கு கவலை அளிக்கும் செய்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரிட்டனில் முதல் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உயிரிழப்பு பதிவாகி உள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தகவல் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து பிரிட்டனில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்