டோர் டூ ஹெல்: 45 ஆண்டுகளாக எரியும் தீ!!

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (12:22 IST)
1970-களில் துர்க்மெனிஸ்தான் நாட்டின் அஹல் நகரில் நிலத்திற்கு கீழ் புதைந்து கிடந்த இயற்கை எரிவாயு படிமத்தை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 


 
 
அந்த ஆய்வின் போது, தர்வேஸ் பகுதியில் உள்ள நிலத்திற்குக் கீழே இயற்கை எரிவாயு மிகப்பெரிய அளவில் பொதிந்து கிடப்பதை கண்டுபிடித்தனர். 
 
ஆனால், ஒரு சில நாட்களில் அந்த பகுதியில் இருந்த விலங்குகள் மர்மமான முறையில் இறந்தன. இதற்கான காரணம் தெரியாமல் தவித்தனர்.
 
பின்னர் ஆய்வின் போது வெளியேறிய இயற்கை வாயுவில் கலந்திருந்த நச்சுத்தன்மையினால் தான் அவ்வாறு நடந்தது என கண்டறிந்தனர். 
 
இந்நிலையில், எரியூட்டினால் அந்த இடத்தில் உள்ள வாயுக்கள் ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும் என நினைத்து அங்கு நெருப்பை வைத்தனர். 
 
ஆனால் அதற்கு மாறாக 1971-ல் எரியூட்டப்பட்ட தீ இன்றும் அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்