குவைத்தில் பயங்கர தீ விபத்து.! 5 இந்தியர்கள் உட்பட 43 பேர் பலி..!

Senthil Velan

புதன், 12 ஜூன் 2024 (16:14 IST)
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 இந்தியர்கள் உட்பட 43 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதால், அடுக்குமாடியில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற முயன்றனர். இருப்பினும் தீ விபத்தில் பலர் சிக்கிக் கொண்டனர்.
 
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் ஐந்து இந்தியர்கள் உட்பட 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழர்கள் இருவர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 
இது குறித்து குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: ஆந்திரா துணை முதல்வராக பவன் கல்யாண் நியமனம்..!

குவைத் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.   தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் விவரங்களை தெரிந்து கொள்ள  +965-65505246 என்ற உதவி எண்ணை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்