பிஜி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் நரேந்திர மோடி

புதன், 19 நவம்பர் 2014 (11:10 IST)
பிஜி நாடாளுமன்றத்தில், ‘நம் வெற்றிப் பாதையை உலகம் முழுவதும் பாராட்ட வேண்டும்‘ என்று கூறி நரேந்திர மோடி உரையாற்றினார்.
 
ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஃபிஜி நாட்டுக்கு நரேந்திர மோடி சென்றார். கடந்த 1981 ஆம் ஆண்டில், ஃபிஜி நாட்டுக்கு மறைந்த பிரதமர் இந்திரா காந்தி சென்றார்.
 
அதன்பிறகு, ஃபிஜி செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி. இந்நிலையில், பிஜி நாடாளுமன்றத்திற்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
பிஜி பிரதமர் பேசும் போது “இந்தியா தற்போது உலகில் எழுச்சி பெறு வரும் சக்தியாக உள்ளது உலகின் மிகப் பெரிய ஜனநாயக தலைவராக மோடி உள்ளார்“ என்று கூறினார்.
 
பின்னர் பேசிய நரேந்திர மோடி, “ஒரு நாட்டின் சக்தி அதன் அளவில் இல்லை. ஆனால் அதன் பார்வை மற்றும் மதிப்பைப் பொறுத்தது. பிஜி மக்கள் பல்வேறு வரலாறுகள் இனம் மொழிகளைக் கொண்டவர்கள், உங்கள் வெற்றிப் பாதையை நீங்கள்தான் தெரிவு செய்ய வேண்டும்.
 
நம் வெற்றிப் பாதையை உலகம் முழுவதும் பாராட்ட வேண்டும் இரு நாடுகளிலும் மக்கள் சக்தி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
 
மேலும் சிறப்பான வரவேற்பு, சிறந்த விருந்தோம்பல் அளித்தமைக்கு நன்றி. இருநாட்டு உறவுகள் வலுப்படுத்த இரு நாட்டுக்கும் இடையேயான பயண வழிமுறைகளை எளிதாக்க வேண்டும். பிஜியில் பாலிவுட் படங்கள் எடுக்கப்பட வேண்டும்'' என்று கூறினார் நரேந்திர மோடி.

வெப்துனியாவைப் படிக்கவும்