’ஓடிப்போகலாமா!..’ சிறுமிக்கு 2400 குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியை கைது

சனி, 28 மார்ச் 2015 (13:33 IST)
அமெரிக்காவில் ஆசிரியை ஒருவர் 11 வயது சிறுமிக்கு 2400 காதல் குறுஞ்செய்திகளை அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அமெரிக்காவின் பென்சிலாவேனியாவில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் ஜெரால்டின் ஆல்கார்ன் (28) என்பவர், 11 வயது சிறுமிக்கு தவறான உறவுக்காக 2400 குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
 
அந்த குறுஞ்செய்தியில், தனது ஆழமான வெளிப்படுத்தும் விதமாகவும், அந்த சிறுமியை அவர் தத்தெடுத்துக் கொள்வதாகவும், அதனால் அவளது தாயை விட்டுவரும்படியும், இருவரும் வேறு எங்கேயாவது ஓடிப்போய் விடுவோம் என்றும் அனுப்பியுள்ளார்.
 
இந்த விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரிந்ததையடுத்து, அவர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் ஆசிரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் 1 லட்சம் டாலர் அபராதம் செலுத்தி வெளியே வந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்