குறுந்தகவல் அனுப்பும் முறையை கண்டுபிடித்தவர் மரணம்

வியாழன், 2 ஜூலை 2015 (15:46 IST)
மொபைல் போன்களில் குறுஞ்செய்தி அனுப்பும் எஸ்.எம்.எஸ் வசதியை கண்டுபிடித்த மாட்டி மெக்கோனன் காலமானார்.
 

 
20ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக எஸ்.எம்.எஸ் திகழ்கிறது. இதனால் மட்டி மெக்கோனன் எஸ்.எம்.எஸ்ஸின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த 63 வயதான மெக்கோனன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 30ஆம் தேதி [செவ்வாய் கிழமை] உயிரிழந்தார்.
 
எஸ்.எம்.எஸ் திட்டத்தை உருவாக்கும் முயற்சிக்கு நோக்கியா செல்போன் நிறுவனம் அவருக்கு உதவி செய்தது. கடந்த 1994ஆம் ஆண்டு மொபைல் போன் வாயிலாக எஸ்.எம்.எஸ்-ஐ நெய்ல் பாப்வொர்த் என்பவருக்கு முதன்முதலாக அனுப்பினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்