வேகமாக பரவும் மர்ம நோய் - இரண்டு வெளிநாட்டவர்கள் பலி

திங்கள், 21 ஏப்ரல் 2014 (12:19 IST)
சவுதி அரேபியா மற்றும் யுனைடெட் அராப் எமிரேட்ஸ் பகுதிகளில் 'மெர்ஸ்' என்னும் தொற்றுக்கு இதுவரை இரண்டு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 20 பேர் பாதிப்படைதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
மத்தியக் கிழக்கு நாடுகளில் இந்த நோய் முதலில் காணப்பட்டதால் இதற்கு மெர்ஸ் (MERS - Middle East respiratory syndrome ) என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கானவர்கள் பலியாக காரணமாக இருந்த 'சார்ஸ்' கிருமியை விட ஆபத்தானதாக கருதப்படுகிறது.
 
 மெர்ஸ் தொற்றின் அறிகுறிகளாக காய்ச்சல், மூச்சு திணறல், நிமோனியா மற்றும் கிட்னி குறைப்பாடுகள் ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன.   
 
மார்ச் மாதம் 29 ஆம் தேதி சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டுவிட்டு திரும்பிய மலேஷியாவை சேர்ந்த  54 வயது நபர் மெர்ஸ் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளார். 
 
இந்த தொற்று தென்கிழக்கு ஆசியவிலும் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்