எபோலா நோய் மருந்துவ சிகிச்சையில் குரங்கு பிழைத்தது

சனி, 30 ஆகஸ்ட் 2014 (16:02 IST)
கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸ் கொல்லி மருந்தை கண்டுபிடித்து,  அதனை குரங்குகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர்.   
தற்போது உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை என்றால் அது கண்டிப்பாக எபோலா வைரஸ் என்றால் அது மிகையாகாது.
 
முதலில் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில்  இந்நோயால் பலர் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர். பின் இந்நோய் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவியது.
இதனால் விமான நிலையங்களில் மருத்துவர் குழுவை நியமித்து பரிசோதனை செய்த பிறகே வெளிநாட்டு பயணிகளை அவரவர் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றனர். 
 
இந்நிலையில் கனடா நாட்டின் ஆய்வு கூடம் ஒன்றில் எபோலா பாதிப்படைந்த  18 குரங்குகளுக்கு நோய் குணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இக்காரணத்தால் மனிதர்களுக்கும் இம்மருந்து பயணடைந்து உயிரை காப்பாற்றும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்