6 மாதங்களில் 100 பேரின் தலைகளை துண்டித்து செஞ்சுரி போட்ட சவுதி அரசு

புதன், 17 ஜூன் 2015 (04:02 IST)
சிரியாவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரனின் தலையை வெட்டியதன் மூலம் 6 மாதங்களில் 100 பேரின் தலைகளை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது சவுதி அரசு.
 

 
சவுதி அரேபியா நாட்டில் கொலை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
 
இந்நிலையில், சவுதிக்குள் போதைப்பொருளை கடத்த முயன்ற வழக்கில், சிரியாவை சேர்ந்த இஸ்மாயில் அல் தவ்ம் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு சவுதியில் உள்ள ஜவுப் நகரில் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
இவருடன் சேர்த்து இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மட்டும் சவுதியில் மொத்தம் 100 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
கடந்த 1995ஆம்  ஆண்டு 192 பேரின் தலைகளை துண்டித்து சவுதி வரலாற்றிலேயே அதிகபட்சமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த சாதனையை இந்த ஆண்டு மிஞ்சி விடுமோ அங்குள்ள சமுக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
6 மாதங்களில் 100 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றியுள்ள சவுதி அரசுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்