அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு பெருகி வரும் ஆதரவு

திங்கள், 5 அக்டோபர் 2015 (17:03 IST)
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.


 
 
அடுத்த அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக செப். 29ஆம் தேதி அங்கு ஒரு கருத்துக் கணிப்பு நடந்தது.
 
அதில், கட்சிக்குள் ஹிலாரிக்கு 44 சதவீதமும், அவருக்கு கடும் போட்டியாக விளங்கும்  பெர்னி சாண்டர்சுக்கு 28 சதவீத பேரும் ஆதரவு அளித்திருந்தனர். இந்நிலையில், 30 லட்சம் பேர் உறுப்பினராக உள்ள அமெரிக்க தேசிய கல்வி சங்கம், தங்களது ஆதரவை ஹிலாரிக்கு வழங்கியுள்ளது. 
 
ஏற்கனவே இரண்டு முறை ஒபாமா அதிபர் ஆகிவிட்டதால், இந்த தேர்தலில் அவர் போட்டியிட முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்