சமீபத்தில் எகிப்து தொல்லியல் துறை சக்யுரா பகுதியில் இருந்து 59 சவப்பெட்டிகளை கண்டெடுத்துள்ளது. இவை சுமார் 2500 ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. அவற்றில் ஒரு சவப்பெட்டியை தொல்லியல் ஆய்வாளர்கள் முன்னிலையில் திறந்தனர். அதில் பிரத்யேகமாக அடக்கம் செய்வதற்காகவே தயாரிக்கப்பட்ட துணியில் மம்மி ஒன்று சுற்றப்பட்டு இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த மம்மி நியூ க்ராண்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.