அமெரிக்காவில் பொருளாதாரமும், வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது - ஒபாமா உரை

புதன், 21 ஜனவரி 2015 (16:02 IST)
அமெரிக்கப் பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாகவும் நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகவும் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
 
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தின் போது பேசிய அதிபர் ஒபாமா, “ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈராக் மற்றும் ஆப்கனில் 6 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 15 ஆயிரம் வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
 
கடந்த 15 வருடங்களில் நாடு அபரிமிதமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. நாட்டிம் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதோடு, வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்