எபோலா: லைபீரியாவில் ஊரடங்கு உத்தரவு

புதன், 20 ஆகஸ்ட் 2014 (15:11 IST)
எபோலா நோய் பரவுவதைத் தடுக்க லைபீரியாவில் ஊரடங்கு உத்தரவை அந்நாடு அதிபர் பிறப்பித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய் தாக்கி  இதுவரை 1,229 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் 2 ஆயிரத்து 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்நோய் பரவாமல் தடுக்க லைபீரியாவில் ஊரடங்கு உத்தரவை அந்நாடு அதிபர் பிறப்பித்துள்ளார்.

நோய் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதை அடுத்து, லைபீரியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்