பப்புவா நியூகினியாவில் கடுமையான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

செவ்வாய், 5 மே 2015 (10:57 IST)
பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
பப்புவா நியூகினியாவின் கொக்கொப்பு நகருக்கு தெற்காக 13 கி.மீ தொலைவில், கடலுக்கடியில் 50 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
இதன் காரணமாக சுனாமி ஏற்படும் என்று எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. கடல் அலைகள் 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் உயரத்திற்கு எழும்ப வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் எச்சரித்துள்ளது.
 
இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்த இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்