நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

திங்கள், 4 மே 2015 (12:23 IST)
நியூசிலாந்தின் தெற்கு தீவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
 
இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
நியூசிலாந்தின் தெற்கு தீவிலுள்ள வனாகா என்ற நகரம் சுற்றுலா மையமாகும். இங்கு 6,500 மக்கள் வசித்து வருகிகன்றர். 
 
இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு தங்கியிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

நேபாளத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்