நிலநடுக்கத்தால் நேபாளத்தில் 449 பேர் பலி

சனி, 25 ஏப்ரல் 2015 (16:38 IST)
நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 449 பேர் உயிரிழந்துள்ளதாக  நேபாள டிஐஜி கமல் சிங் பாம் தெரிவித்துள்ளார்.
 
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது
 
நேபாள தலைநகரம் காத்மண்டில் உள்ள புகழ்பெற்ற தரரா கட்டிடம் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கணக்காணோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 449 பேர் உயிரிழந்துள்ளதாக  நேபாள டிஐஜி கமல் சிங் பாம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
இந்த நில நடுக்கத்தில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.  கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்