நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

திங்கள், 30 நவம்பர் 2015 (10:08 IST)
நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டில் இன்று காலை 4.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.


 

 
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டில் இன்று காலை 6.10 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
 
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
 கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமாக கட்டிடங்கள் இடிந்து நாசமாயின என்பது நினைவு கூரத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்