கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

சனி, 18 நவம்பர் 2023 (15:37 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்கு கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்  
 
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மிண்டானாவ் என்ற மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக  கட்டிடங்கள் குலுங்கின. ஷாப்பிங் மால் கூரை இடிந்து விழுந்ததாகவும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.  
 
மேலும் அலுவலகங்களில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்து சிதறி உடைந்தன என்றும்  இந்த நிலநடுக்கம்    காரணமாக பொதுமக்கள் பெரும் பதட்டத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  7.2 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை குறித்து இதுவரை எந்த விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்