ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: வட இந்தியாவில் நில அதிர்வு

சனி, 2 ஜனவரி 2016 (16:23 IST)
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பிராந்தியத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் வட இந்தியா, ஜம்மு-காஷ்மீர் உணரப்பட்டது. லேசான நில அதிர்வால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.


 
 
ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் பகுதியை மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 170 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் வட இந்தியா, மற்றும் பாகிஸ்தானிலும் லேசான நில அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால்,  ஜம்மு-காஷ்மீர், வட இந்தியாவில் வீடுகள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்