ஆஸ்திரேலியாவில் இன்று 5.3 அளவில் நிலநடுக்கம்

வியாழன், 30 ஜூலை 2015 (20:29 IST)
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் ஸ்கேலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
 
ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தின் ஃப்ரேசர் தீவில் இன்று காலை 9 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனைத் தொடர்ந்து வைடு பே பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்ச ம் புகுந்துள்ளனர். 
 
குயின்ஸ்லாந்தின் சன்ஷைன், கோல்டு ஆகிய கடற்கரை பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆஸ்திரேலியாவின் புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நிலநடுக்கத்தினால் சுனாமி அபாய எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்