கொலம்பியா நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

புதன், 22 அக்டோபர் 2014 (11:39 IST)
கொலம்பியா, ஈக்குவடார் எல்லைப்பகுதிகளில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். 
 
அக், 21 நேற்று ஈக்குவடார் எல்லைப்பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது. எனினும் இந்த நிலநடுக்கம் குறித்து உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரியவில்லை.
 
மேலும் சேத நடவடிக்கைகள் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. பூமத்திய ரேகையில் இருந்து வடக்கே 1 டிகிரி, தீர்க்கரேகையில் இருந்து மேற்கே 77.7 டிகிரி பகுதியில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்