நாளைய டிரம்பின் தொடக்கம்; ஒபாமாவின் முடிவு!

வியாழன், 19 ஜனவரி 2017 (10:13 IST)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்டு டிரம்ப் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார். 


 
 
டொனால்டு டிரம்ப் வாஷிங்டனில் நாளை (20-ந் தேதி) நடக்க உள்ள பிரமாண்ட விழாவில் அமெரிக்கவின் 45-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். 
 
மேலும், டிரம்ப் பதவி ஏற்கும்போது இரண்டு பைபிள்களை பயன்படுத்துகிறார். ஒன்று, முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்தியது. மற்றொன்று, டிரம்ப் தனது குழந்தைப்பருவத்தில் பயன்படுத்தியது. 
 
டிரம்ப் பதவி ஏற்பு விழாவுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஜனாதிபதி ஒபாமா நேரில் பார்வையிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்