ஜெயலலிதாவை பின்பற்றும் டொனால்ட் டிரம்ப்: ஆண்டுக்கு 1 டாலர் சம்பளம் போதும்!

திங்கள், 14 நவம்பர் 2016 (12:43 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராக 1991-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போது தனக்கு சம்பளமாக 1 ரூபாய் போதும் என அறிவித்தார். இதனையே தற்போது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பின்பற்ற உள்ளார்.


 
 
தனக்கு சம்பளமாக ஆண்டுக்கு 1 டாலர் போதும் என கூறியுள்ளார் டிரம்ப். பரபரப்பான அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரியை தோற்கடித்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் தனது வெற்றிக்கு பிறகு முதல் முறையாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
 
இதில் பேசிய புதிய அதிபர் டிரம்பிடம் தற்போது அமெரிக்க அதிபருக்கு ஆண்டுக்கு 4 லட்சம் டாலர் சம்பளம் வழங்கப்படுகிறது. நீங்களும் அதை வாங்குவீர்களா என கேள்வி கேட்கப்ப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த டிரம்ப், நான் அவ்வளவு சம்பளம் வாங்கப்போவதில்லை ஆண்டுக்கு 1 டாலர் சம்பளம் போதும் என கூறியுள்ளார். மேலும் தான் அதிபராக இருக்க போகும் இந்த 4 ஆண்டும் விடுமுறை எடுக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்