சீன நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 398 ஆக அதிகரிப்பு

திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (17:48 IST)
தெற்கு சீனாவைத் தாக்கிய கடும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் குறைந்தது 398 பேர் பலியாகியிருப்பதாகவும், 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  
 
தெற்கு சீனாவைத் தாக்கிய 6.5 ரிக்டர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 398 ஆக அதிகரித்து இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லுதியன் பகுதியில் 12,000க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் 2500க்கும் அதிகமான இராணுவ வீரர்களும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். 
 
சீன பிரதமர் லீ கெகியாங் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளைப் பார்வையிட்டு  விரைவாக மீட்புப் பணிகளைச் செய்யுமாறு உத்தரவிட்டார்.
 
மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர், நான் சடலங்கள் துணிகளில் சுத்தப்பட்டு எடுத்து செல்லப்பட்டதைக் கண்டேன். சில சடலங்கள் சிறிய துணிகளில் சுத்தப்பட்டு இருந்தது, அவை சிறுவர்களின் சடலமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்