இலங்கை சபாநாயகருக்கு சபாநாயகருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்

வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (02:30 IST)
இலங்கை நாடாளுமன்ற சபாநயகர் கரு ஜயசூர்ய, தனக்கு மர்ம நபர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷசே ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பலர்  நாடாளுமன்றத்தில் தனித்து இயங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
 
தங்களது கோரிக்கயை வலியுறுத்தி சபைக்கு நடுவே வந்து கோஷம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜயசூர்யவினால் ஒத்தி வைக்கப்பட்டது.
 
இதனையடுத்து, புதன்கிழமை அன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் வழக்கம் போல் துவங்கியது.
 
அப்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷசே ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தங்களது கோரிக்கயை முன்வைத்தனர். இதனால், மஹிந்த ராஜபக்ஷசே ஆதரவு உறுப்பினர்களுக்கும், ஆளும்கட்சியினர் இடையே கடும் மோதல் வெடித்தது.
 
அப்போது, சபாநாயகர் கரு ஜயசூர்ய இடைமறித்துப் பேசுகையில்,  இந்த விஷயம் தொடர்பாக, மர்ம நபர் ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன் என்றார்.
 
இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசு ரகசிய விசாரணயை துவங்கியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்