மாஃபியா பாணி கோடீஸ்வர வணிகருக்கு சீனா மரண தண்டனை

திங்கள், 9 பிப்ரவரி 2015 (19:27 IST)
மாஃபியா பாணி குற்றக்கும்பலை நடத்திய ஒரு பெரும் கோடீஸ்வர வணிகருக்கு சீனா மரண தண்டனை வழங்கியுள்ளது.
 
இந்த குற்றக்கும்பலில் அரசாங்க அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த வணிக நிறுவனமான ஹன்லொங் குழுமத்தின் தலைவராக லியூ ஹன் இருந்துள்ளார்.

 
ஆனால், அவர் கொலைகள், ஆயுதங்களை விற்பனை செய்வது மற்றும் சூதாட்டம் ஆகியவற்றுடனும் சம்பந்தப்பட்டுள்ளார். அவருக்கும் அவரது இளைய சகோதரருக்கும் ஏனைய மூன்று சகாக்களிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
சீனாவின் முன்னாள் உள்துறை பாதுகாப்பு தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவின் உறுப்பினரும்மான ஷோ யொங்காங் அவர்களுடன் லியூவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சிச்சுவான் மாகாணத்தின் கட்சியின் செயலாளராக இருந்த ஷோ மீதும் ஊழல் குறித்த விசாரணைகள் நடக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்