மரண தண்டனை குற்ற விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர சீனா ஆலோசனை

செவ்வாய், 28 அக்டோபர் 2014 (15:27 IST)
சீனாவில் மரண தண்டனையில் இருந்து சில குற்றங்களுக்கு விதிவிலக்கு அளிக்க சீன கம்யூனிஸ்டு கட்சி ஆலோசனை நடத்தியது.
 
சீனாவில் அதிக அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவதாக மனித உரிமைகள் குழு புகார் கூறி வருகிறது.
 
இங்கு கடந்த ஆண்டில் மட்டும் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
எனவே, அது குறித்து சீன கம்யூனிஸ்டு கட்சி கூடி ஆலோசனை நடத்தியது. பொதுவாக இங்கு 55 குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
 
அதில் இருந்து 9 குற்றங்களுக்கு மரண தண்டனையில் இருந்து விதிவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுளளன.

வெப்துனியாவைப் படிக்கவும்