1000 பேரை கொன்று குவித்த இந்தோனேஷிய சுனாமி

திங்கள், 1 அக்டோபர் 2018 (14:21 IST)
இந்தோனேஷியாவில் சுனாமி மட்டும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. 
 
கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பலர் காணாமல் போயிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.  இதுகுறித்து பேசிய துணை அதிபர் மக்களுக்கு உதவிகளை செய்து வருவதாகவும், ஏராளமான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்