இஸ்ரேல் கலைஞரான சிகாலிட், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழைய கருப்பு நிறம் படிந்த ஆடையை, சாக்கடலில் 3 மாதங்கள் வைத்திருந்தார். நீண்ட கம்புகளில் ஆடையை கட்டி, சாக்கடலுக்குள் வைத்து விட்டார். வாரம் ஒருமுறை துணியை எடுத்து, படங்கள் எடுத்துக்கொண்டார்.
கருப்புத் துணி, மூன்றே மாதங்களில் பளிங்கு நிறம் கொண்ட துணியாக மாறிவிட்டது. சாக்கடலில் இருக்கும் அதிகப்படியான உப்புதான், துணியை இப்படி மாற்றியிருக்கிறது என கருதப்படுகிறது.