பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுவதாக அறிவிப்பு!

வெள்ளி, 24 ஜூன் 2016 (13:31 IST)
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகிவிட்ட நிலையில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.


 
 
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற பிரிட்டனில் நடந்த வாக்கெடுப்பின் முடிவு காரணமாக ஐரோப்பிய ஒன்றிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரட்டன் விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றதால், இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார் பிரதமர் டேவிட் கேமரன்.
 
ஆனால், ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார் டேவிட் கேமரன். இது தொடர்பாக பிரச்சாரங்களையும் மேற்கொண்டார். ஆனால் பொது வாக்கெடுப்பில் மக்கள் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டாம் என வாக்களித்ததால் உலகம் முழுவதும் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 
இதனையடுத்து தான் பதவி விலக இருப்பதாக டேவிட் கேமரன் அறிவித்துள்ளார். முறைப்படி வரும் அக்டோபர் மாதம் அவர் பதவி விலக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்