ஃபேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிட்ட பெற்றோர்: வழக்கு தொடர்ந்த மகள்

வியாழன், 15 செப்டம்பர் 2016 (20:52 IST)
ஆஸ்திரேலியாவில் ஃபேஸ்புக்கில் தனது குழந்தைப்பருவ புகைப்படத்தை பதிவிட்டதால், பெற்றோர்கள் மீது 18 வயது பெண் வழக்கு தொடர்ந்தார்.


 

 
உலகம் முழுவதும் ஃபேஸ்புக் பயனர்கள், அவர்களது பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிட்டு அதற்கு லைக் பெறுவது வழக்கமான ஒன்று. அதேபோல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெற்றோர்கள் அவர்களது மகளின் குழந்தைப்பருவ புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.
 
அதனால் பெற்றோர்களுக்கு எதிராக அந்த 18 வயது பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது:-
 
எனது அனுமதியின்றி சுமார் 500 புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் பாதித்துவிட்டது. அதனால் நான் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன், என்று கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்