ஆயுளை அதிகரிக்கும் சைக்கிள் பயணம் : ஆய்வில் ஆச்சர்ய தகவல்

திங்கள், 12 அக்டோபர் 2015 (17:55 IST)
வாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட தூரம் சைக்கிள் ஓட்டினால் ஆயுள் அதிகரிக்கிறது என்பது ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.


 
 
நாம் ஒருடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்காக பயன்படுத்தும், பைக்,கார்,ஆட்டோ போன்ற வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகையால் காற்று மாசுபடுகிறது. இதனால் காற்று மண்டலத்திலும், பருவக்காலங்களிலும் மாற்றம் ஏற்படுவதாக பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் ஏற்கனவே தெரியவந்துள்ளது. ஆகவே, பல நாடுகள் தமது குடிமக்களை சைக்கிள் ஓட்டும்படி அறிவுறுத்தி வருகின்றன.
 
புகைகளை கக்கும் வாகனங்களுக்கு மாற்றாக, சைக்கிள் ஓட்டுவது என்ற பழக்கம் மேலைநாடுகளில் அதிகரித்து வருகிறது. சைக்கிள் ஓட்டுவது சுற்றுச் சூழலுக்கு நன்மை பயப்பதோடு மட்டுமின்றி நமது ஆயுளையும் அதிகரிக்கும் என நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
 
இந்த ஆய்வின் படி, ஒரு மணிநேர சைக்கிள் ஓட்டுவது, நமது வாழ்நாளில் மேலும் ஒரு மணிநேரத்தை அதிகரிக்கிறதாம். ஒரு வாரத்துக்கு 74 நிமிடம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு, அதை ஓட்டாதிருப்பவர்களைக் காட்டிலும் சுமார் ஆறு மாத காலம் வரை ஆயுள் நீட்டிப்பு கிடைப்பதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
 
உலகிலேயே நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள்தான், சைக்கிளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அங்கு ஆயிரக்கணக்கான பேர் மரணத்திலிருந்து தப்பிப்பதற்கே அவர்கள் சைக்கிள் ஒட்டுவதனால்தான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு சைக்கிளில் பயணிப்பவர்களுக்கென்றே பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்