ஃபிடல் காஸ்ட்ரோ மரணத்தை வீதியில் இறங்கி கொண்டடிய பொதுமக்கள்!

சனி, 26 நவம்பர் 2016 (16:41 IST)
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோ இன்று அதிகாலை இறந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து அவரது மரணத்தை கியூபாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய பொதுமக்கள் கொண்டாடியுள்ளனர்.


 
 
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அந்நாட்டுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் ஃபிடெல் காஸ்ட்ரோ. அவரது மரணச் செய்தியை கேட்டு உலக நாடுகள் பலவும் அதிர்ச்சியடைந்துள்ளன. இந்நிலையில் கியூபாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய அந்நாட்டு குடிமக்கள் அவரது மரணச் செய்தியை கேட்டு மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.
 
அதிகாலையில் அமெரிக்காவின் மியாமி நகரில் திரண்ட பொதுமக்கள் சாலையில் மது பாட்டில்களுடன் உற்சாகமாக ஃபிடெல் காஸ்ட்ரோவின் மரணத்தை கொண்டாடினர்.
 
அவர்கள் கூறும்போது, கியூபாவில் இப்போது தான் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இப்போது தான் அங்கு சுதந்திரமும், ஜனநாயகமும் மலர்ந்துள்ளது. ஃபிடல் காஸ்ட்ரோ மக்களின் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையை பறித்துவிட்டார். அவர் ஒரு சர்வாதிகாரி என்பது தான் உண்மை என அதில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்