காற்றில் பறந்து வந்து காரில் விழுந்த மாடு பலி

திங்கள், 5 அக்டோபர் 2015 (15:57 IST)
பிரான்சு நாட்டில் காற்றில் பறந்து வந்த ஒரு பசுமாடு,  சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பிரான்சில் ஒருவர் தன் மகனுடன் ஒரு மலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வானத்தில் இருந்து ஒரு பசுமாடு பறந்து வந்து அவரின் காரின் முன்பகுதியில் விழுந்திருக்கிறது.
 
இதனைக் கண்ட அவரும், அவரது மகனும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். 500 கிலோ கொண்ட அந்த பசுமாடு விழுந்ததில் கார் முற்றிலும் சேதமானது. நல்ல வேளையாக அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர். 
 
ஆனால் அந்த பசுமாடு இறந்து விட்டது. விசாரணையில், அது மலைப்பகுதி என்பதால் மலையின் மேல் பகுதியில் ஏறிக்கொண்டிருந்த அந்த மாடு, கால் இடறி கீழே விழுந்திருக்ககிறது. அப்போதுதான் கீழே ஒரு வளைவில் வந்து கொண்டிருந்தத இவர்கள் காரில் அது விழுந்திருக்கிறது என்பது தெரியவந்தது.
 
இது பற்றி கருத்துக் கூறிய அந்த கார் ஓட்டுனர் “நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். அந்த மாடு இறந்துபோனது என்னை மிகவும் பாதித்துவிட்டது” கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்