நாயிடமிருந்து மிக வேகமாக மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நாயை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அந்த நாயின் ரத்தப் பரிசோதனை ஆய்வு செய்து வருவதாகவும் முழு அளவில் குணம் அடைந்தால் மட்டுமே அந்த நாய் உரிமையாளருடன் ஒப்படைக்கப்படும் என்றும் ஹாங்காங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக பரவும் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது